×

55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - வங்கதேசம் இடையே ரயில் சேவை...!! காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: 55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - வங்கதேசம் இடையே ரயில் சேவையை பிரதமர் மோடிதொடங்கி வைத்தார். இந்தியாவும், வங்கதேசமும் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன. 2019 அக்டோபரில், பிரதமர் ஷேக் ஹசினா அலுவலகப் பயணமாக இந்தியா வந்தார். 2020 மார்ச்சில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முஜிப் பார்ஷோ–வின் போது பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி செய்தி ஒன்றை அனுப்பினார்.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் இரண்டு தலைவர்களும் தொடர்ந்து, தொடர்பில் இருந்தனர். இதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் உச்சி மாநாடு இம்மாதம் இன்று நடைபெற்றது.  இருதரப்பு உறவுகள், குறிப்பாக கோவிட்டுக்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் உச்சி மாநாட்டில் விரிவாக விவாதித்தனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இன்று ஹல்திபரி-சிலாஹதி ரயில் பாதையை தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து சிலாஹதியில் இருந்து ஹால்திபரி வரை சரக்கு ரயில் இயக்கப்படுகிறது. ஹால்திபரி, வடகிழக்கு ரயில்வேயின் கதிஹார் கோட்டத்தில் உள்ள முக்கியமான ரயில்நிலையம் ஆகும்.

Tags : Bangladesh ,India ,Modi , India-Bangladesh train service after 5 years ... !! Prime Minister Modi started with a video
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...