×

காங். முன்னாள் தலைவர் இளங்கோவனுக்கு எதிரான 4 அவதூறு வழக்கு ரத்து

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மற்றும் மது கடைகள் தொடர்பான விவகாரத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழக ஆளுநர் குறித்து 2016ம் ஆண்டு  அப்போதைய காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.இதையடுத்து, முதல்வர் மற்றும் ஆளுநருக்கு எதிராக அவதூறு கருத்துகளை  தெரிவித்ததாக தமிழக அரசு சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக  அவதூறு வழக்கு தொடரப்பட்டன.

இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் முன்பு ேநற்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி, அவதூறு வழக்கு தொடர அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அவதூறு கருத்துகள் அரசு நிர்வாகத்தின் மீதானது இல்லை எனக்கூறி ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிரான 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags : Ilangovan , Cong. 4 defamation cases against former leader Ilangovan canceled
× RELATED டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பலி