×

டெல்லி கலவர வழக்கில் கைதான உமர் காலித்துக்கு பல்வலி சிகிச்சை அளிக்க உத்தரவு

புதுடெல்லி: பல் வலிக்கு சிசிக்சை அளிக்க மறுப்பதாக ஜேஎன்யு மாணவர் உமர் காலித் நேற்று நீதிமன்றத்தில் சிறை அதிகாரிகள்மீது குற்றம்சாட்டினார். டெல்லி கலவர வழக்கில்  ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர்காலித் கடந்த அக்டோபர்  1ம் தேதி கைது செய்யப்பட்டார். நேற்று அவர் விசாரணைக்காக தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் தினேஷ் குமார் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதியிடம் சிறை அதிகாரிகள் குறித்து உமர் காலித் புகார் தெரிவித்தார். தனக்கு கடந்த மூன்று நாட்களாக கடுமையான பல் வலி இருந்து வருவதாகவும், அதற்காக அவர்கள் சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதனை கேட்ட நீதிபதி, காலித்துக்கு சிறையில் உடனடியாக பல் மரத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இதில்காலதாமதம் ஏற்பட்டால், சிறைக்கு வெளியில் உள்ள பல் மருத்துவரிடம் அழைத்துச்சென்று சிறை விதிகளின்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

* ஜமியா மாணவருக்கு குரல் மாதிரி சோதனை நடத்த கோர்ட் அனுமதி
வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில் கைதான ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலை மாணவர் ஆசிப் இக்பால் தன்கா மீதும் உஃபா சட்டம் உள்பட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்கு நடைபெறுகிறது. சிபிஐ விசாரணை நடத்தும் இந்த வழக்கில், தன்கா மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க அவரது குரல் மாதிரி சோதனையை, அவரது செல்போன் தகவல் தொடர்புகளுடன் ஒப்பீடு செய்ய வேண்டும் என சிபிஐ விசாரணை அதிகாரி சார்பில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த தன்கா தரப்பு வக்கீல், தனது கட்சிக்காரர் குற்றமற்றவர் எனக் கூறினார்.

எனினும், குரல் மாதிரி சோதனை என்பது ஒரு ஒப்பீட்டை உறுதி செயவதற்காக நடத்தப்படுவது என்றும், அதனை குற்றம் சாட்டப்பட்டவர் மீதான வேறு வழக்குகளில் சாட்சியாக போலீசார் சேர்க்க முடியாது எனவும் கூறிய நீதிபதி ராவத், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, தன்காவிடம் குரல் மாதிரி சோதனை நடத்தலாம் எனக் கூறினார். மேலும், எப்போது குரல் மாதிரி எடுக்கப்படும் என்பது குறித்து சிபிஐயின் தடய அறிவியல் துறை சார்பில் சிறைத்துறைக்கு முன் கூட்டியே தெரிவித்தும், குரல் மாதிரிக்கு தன்கா பேசவேண்டிய அறிக்கையை முன்கூட்டியே அவரிடம் வழங்கி ஒப்புதல் பெற வேண்டும் எனவும் கூறியதோடு, அறிக்கையை நீதிமன்றத்திலும் ஒரு நகல் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Tags : Omar Khalid ,Delhi , Umar Khalid arrested in Delhi riots
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...