×

வால்பாறை அருகே நடக்க முடியாமல் விழுந்து கிடக்கும் யானைக்கு சிகிச்சை

வால்பாறை: வால்பாறையை அடுத்து உள்ள பெரியகல்லார் எஸ்டேட் வனப்பகுதியில் நடக்க முடியாமல் விழுந்து கிடந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். வால்பாறையை அடுத்து உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரியகல்லார் எஸ்டேட் வனப்பகுதியில், கடந்த சில நாட்களாக நடக்க முடியாமல் காட்டு யானை ஒன்று விழுந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து உயர்  அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பக துணைக்கள இயக்குநர் சேவியர் உத்தரவின்பேரில் யானைக்கு நேற்று முதற்கட்டமாக முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. வால்பாறை கால்நடை மருத்துவர் மெய்யரசன் தனது குழுவினருடன் சென்று யானைக்கு சிகிச்சை அளித்தார். மாத்திரைகள் மற்றும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. யானைக்கு மேல் தற்காலிக கூரை அமைக்கப்பட்டு உள்ளது. வனத்துறை ஊழியர்கள் யானையின் உடல் நலத்தை கண்காணித்து வருகின்றனர். யானை பின்கால்கள் முதுகு பகுதியில் உட்காயம் உள்ளதாக முதற்கட்ட ஆய்வில் தெரிந்ததாக கூறிய வனத்துறையினர் உரிய சிகிச்சை மற்றும் உணவு அளிக்க முடிவு செய்து உள்ளனர்.

Tags : Valparai , Valparai, elephant
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை