×

விவாகரத்து, ஜீவனாம்சம் விவகாரத்தில் மதரீதியிலான சட்டங்களாக இல்லாமல், பொதுவான ஒரே மாதிரியான சட்டம் கோரி வழக்கு : மத்திய சட்டத்துறைக்கு நோட்டீஸ்

டெல்லி : நாடு முழுவதும் விவகாரத்து முறையில் ஒரே மாதிரியான சட்டத்தை வகுக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்க மத்திய சட்டத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.உலகின் பல்வேறு நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தியாவில் விவாகரத்து நடப்பது என்பது மிகக் குறைவு என்கிறது சர்வதேச அறிக்கை. அதாவது, இந்தியத் திருமணங்களில் நூற்றுக்கு ஒன்று மட்டுமே தோல்வியடைவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம், இந்தியர்கள் திருமணத்தை மதத்தோடும் கலாசாரத்தோடும் தொடர்புபடுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இந்திய விவாகரத்து சட்டங்களைப் பொறுத்தவரை, சமீப காலங்களில் முத்தலாக் தடை மற்றும் தொழுநோய் உள்ளவர்களை விவாகரத்து செய்யத் தடை என்று புதிய சட்டத் திருத்தங்களைப் மத்திய அரசு புகுத்திக் கொண்டிருக்கிறது. இதில் ஆண்களோ பெண்களோ, அவர்கள் திருமண வாழ்வு கசக்கும்போது, அதிலிருந்து விடுபட்டு வெளிவர நினைப்பது தவறானதல்ல. ஆனால், எந்தெந்தக் காரணத்துக்காக விவாகரத்துப் பெறுவது சட்டப்படி அங்கீகரிக்கப்படுகிறது என்பது குறித்த விரிவான புரிதல் என்பது குறைவாக உள்ளது.

இந்த நிலையில், மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் மதரீதியிலான சட்டங்களாக இல்லாமல், பொதுவான ஒரே மாதிரியான சட்டங்களாக மாற்றியமைக்க வேண்டும். இதுகுறித்து நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் வவந்தபோது, மனுவை விசாரணைக்கு ஏற்பதாகவும், இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒருசில கருத்துக்களை கேட்க வேண்டியுள்ளதால் பதிலளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்படுகிறது. அதனைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் நீதிமன்றம் விரைவில் ஒரு முடிவை மேற்கொள்ளும் என உத்தரவிட்டனர்.

Tags : Federal Law , Divorce, Alimony, Law, Federal Law, Notice
× RELATED வாக்காளர் அட்டைகளை ஆதார் எண்களுடன்...