×

12 திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளுக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

சென்னை: 2020-2021-ம் ஆண்டில் 12 திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளுக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை, அடையலூர், தருமபுரி, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், நெல்லை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருக்கக்கூடிய 12 கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மானிய நிதியுதவி தொகையை நேரடியாக திருக்கோயில்களுக்கு வழங்கும் பொருட்டு கோயில்களின் திருப்பணிக்காக கோவில்கள் பெயரில், வங்கியில் தனி கணக்கு துவங்க கமிஷனர் பிரபாகர், சம்பந்தப்பட்ட இணை, உதவி கமிஷனர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் மூலமாக கிடைக்கக்கூடிய இந்த ரூ.6 கோடி நிதியை கோயில்களின் திருப்பணிக்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும், ஒவ்வொரு நிதியாண்டிலும் கோயில்களின் திருப்பணியை மேற்கொள்வதற்காக நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. முதற்கட்டமாக 2020-2021-ம் ஆண்டில் 12 திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளுக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிதியை பொறுத்தவரையில் அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் படிப்படியாக கோயில் திருப்பணிகளை மேற்கொள்வதற்காக நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government ,Tamil Nadu ,temples , Temples, Reconstruction, Funding, Allocation, Government of Tamil Nadu
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...