×

விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் மசோதாக்களை ரத்து செய்ய வலியுறுத்தி மீஞ்சூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வன், தொகுதி செயலாளர் சேகர், சிவராஜ், மீஞ்சூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வி.பி.ஏழுமலைவாசன், நகர செயலாளர்கள் சந்திரசேகர், சேட்டு, ஒன்றிய துணை செயலாளர்கள் நிர்மல், வேலாயுதம், குமரவேல், பாலாஜி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Vizika protest demonstration
× RELATED சென்னையில் பேருந்து நிறுத்தங்களில்...