×

பாஜ எம்பி பிரக்யா சர்ச்சை: சூத்திரர்களுக்கு புரியாது

சிஹோர்: ‘‘சூத்திரர்களை சூத்திரர்கள் என்று அழைத்தால் தவறாக எண்ணுகிறார்கள். புரிதல் இல்லாததே அதற்கு காரணம்’’ என பாஜ எம்பி பிரக்யா தாகூர் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பிரசாரம் செய்ய சென்ற பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து மத்திய பிரதேசம்,

சிஹோரில் பாஜ எம்பி பிரக்யா தாகூர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இது பாகிஸ்தான் இல்லை, இந்தியா என்பதை மேற்கு வங்க முதல்வர் மம்தா இப்போது புரிந்து கொண்டிருப்பார். இந்தியாவை பாதுகாக்க இந்துக்கள் தயாராகிவிட்டனர். அவர்கள் மம்தாவுக்கு சரியான பதிலடி தருவார்கள். வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வென்று, மேற்கு வங்கத்தில் இந்து ராஜ்ஜியம் கொண்டு வரப்படும். தனது ஆட்சி முடியப் போகிறது என்பதை அறிந்த விரக்தியில் மம்தா இருக்கிறார்.சத்திரியர் ஒருவரை சத்தியர் என அழைத்தால் தவறாக நினைப்பதில்லை. பிராமணரை பிராமணர் என அழைத்தால் தவறாக எண்ணுவதில்லை.

வைசியரை வைசியர் என அழைத்தால் தவறாக நினைப்பதில்லை. ஆனால் சூத்திரரை சூத்திரர் என அழைத்தால் தவறாக எண்ணுகின்றனர். அதற்கு காரணம் அறியாமைதான். புரிந்து கொள்ளாததாதல்தான் அவர்கள் ஆத்திரப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
இது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.


Tags : Pragya ,BJP ,Sutras , BJP MP Pragya controversy: Sutras do not understand
× RELATED காலை 10.20 மணி நிலவரம்: தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி முன்னிலை