×

8 மாதங்களுக்கு பிறகு மெரினா கடற்கரை செல்ல பொதுமக்களுக்கு அனுமதி: குடும்பம், குடும்பமாக குவிந்தனர்

சென்னை: கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த மெரினா கடற்கரை, பெசன்ட் நகர்  கடற்கரை பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கடற்கரையில் குடும்பம் குடும்பமாக காணப்பட்டனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல கடந்த மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்வோர், உடற்பயிற்சி செய்வோர் மெரினாவுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இந்நிலையில், டிசம்பர் 14ம் தேதி முதல் சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, 8 மாதங்களுக்கு பிறகு மெரினா கடற்கரைக்கு செல்ல முதல் அனுமதி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோன்று காலை பெசன்ட் நகர் கடற்கரைக்குள் செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் இரண்டு கடற்கரைகளில் அதிகாலை முதல் ஏராளமானோர் உடற்பயிற்சி, நடைபயிற்சியில் ஈடுபட்டனர். மாலையில் பொதுமக்களும் குவிந்தனர். கடைகளும் திறக்கப்பட்டது. மாஸ்க், தனிமனித இடைவெளியை அதிகாரிகள் கண்காணித்தனர். அதில் மெரினா கடற்கரையில் சமூக இடைவெளி, முககவசம் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் கடற்கரைக்கு வருபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் குதிரைப்படை போலீசாரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

* மாமல்லபுரம் சுற்றுலா தலம் திறப்பு
மத்திய தொல்லியல் துறை உத்தரவின்பேரில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பல்லவர் கால சிற்பங்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 30ம் தேதி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சுற்றுலா தலங்களை திறந்து கொள்ளலாம் என தெரிவித்தது. இந்நிலையில், நேற்று காலை 8 மணிக்கு மாமல்லபுரம் பல்லவர் சிற்பங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்டவை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.ஆன்லைனில் பதிவு செய்து வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பதிவு செய்யாமல் வந்தவர்கள் போன்பே, கூகுல் பே, பேடிஎம் மூலம் கட்டணம் செலுத்தினர்.


Tags : public ,Marina Beach , Permission for the public to go to Marina Beach after 8 months: Family, gathered as a family
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...