×

மூலதன செலவினங்களுக்கு ரூ9,879.61 கோடி ஒதுக்கீடு: தமிழகத்திற்கு இல்லை

புதுடெல்லி: நாடு முழுவதும் மாநிலங்களின் மூலதன செலவினங்களுக்கான சிறப்புத் திட்டத்தை ‘தற்சார்பு இந்தியா’ நலத் தொகுப்பின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார். கொரோனா பெருந்தொற்றால் வரி வருவாயில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு மாநிலங்களின் மூலதன செலவினங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மாநிலங்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 27 மாநிலங்களுக்கு மூலதன செலவினங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் ரூ.9,879.61 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே முதல் தவணையாக ரூ.4,939.81 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சுகாதாரம், ஊரக மேம்பாடு, தண்ணீர் விநியோகம், நீர்ப்பாசனம், எரிசக்தி, போக்குவரத்து, கல்வி, நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மூலதன செலவினங்களுக்கான திட்டங்களுக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்களின் மூலதன செலவினங்களுக்கான சிறப்புத் திட்டத்தின் பயன்களை தமிழகம் தவிர நாட்டிலுள்ள மற்ற அனைத்து மாநிலங்களும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu , Rs 9,879.61 crore for capital expenditure: No for Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...