×

இந்தியா - உஸ்பெகிஸ்தான் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி: இந்தியா - உஸ்பெகிஸ்தான் நாடுகளிடையே 9 ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகியது. இந்தியா - உஸ்பெகிஸ்தான் நாடுகளின் உச்சி மாநாடு நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் அதிபர் சவ்கத் மிர்சியோயேவ் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பிறகு, பரஸ்பர முதலீடு, ராணுவம், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, அணு சக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு, சமூக வளர்ச்சி திட்டங்கள், தகவல் பரிமாற்றம் ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த மாநாட்டில் மோடி பேசுகையில், ‘‘இந்தியாவும், உஸ்பெகிஸ்தானும் தீவிரவாதம், அடிப்படை வாதம், பிரிவினைவாதம் போன்ற ஒரே மாதிரியான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றன. எனவே, தீவிரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை அழிப்பதற்கு இருநாடுகளின் கூட்டு முயற்சி தொடர்ந்து தேவைப்படுகிறது. இருநாடுகளிடையே வேளாண் பொருட்களின் வர்த்தகத்துக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதால் விவசாயிகள் பலனடைவார்கள்,’’ என்றார்.

Tags : India ,Uzbekistan , India - Uzbekistan sign 9 agreements
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!