×

விவசாயிகள் போராட்ட களத்தில் இருந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

புதுடெல்லி, :டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்ட களத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி - அரியானா எல்லையான சிங்கு எல்லையில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி வடமாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிங்கு எல்லையில் போலீஸ் படை  நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க கான்கிரீட்  தடைகள் மற்றும் பல அடுக்கு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. சிங்கு எல்லையில்  ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடியதாலும், போலீஸ் படைகள்  நிறுத்தப்பட்டுள்ளதாலும் அங்கு கொரோனா தொற்று பரவுவதற்கான சூழலும்  ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, விவசாயிகள் தங்களது போராட்டத்தின் போது கொரோனா  வைரஸ் வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. இந்நிலையில், எல்லையில் பதற்றத்தை தணிக்கவும், சட்ட ஒழுங்கு பிரச்னையை சமாளிக்கவும் கூடுதலாக மூத்த போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதில், தற்போது டெல்லி வடக்கு டிசிபி கவுரவ் மற்றும் கூடுதல் டிசிபி கன்ஷ்யம் பன்சால் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் ‘பாசிடிவ்’ உறுதியானதால் அவர்கள் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களின் உடல்நிலையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


Tags : Corona ,IPS officers ,farmers battlefield , IPS, Officer, Corona
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...