தாத்தா ஆனார் முகேஷ் அம்பானி

மும்பை, :பிரபல தொழிலதிபரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நிதா அம்பானி ஆகிய தம்பதியின் மகனான ஆகாஷ் அம்பானிக்கும், ஸ்லோகா மேத்தா என்பவருக்கும் கடந்த 2019 மார்ச் 9ம் தேதி மும்பையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இந்நிலையில், ஆகாஷ் - ஸ்லோகா தம்பதிக்கு தற்போது நேற்றிரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுெதாடர்பாக அம்பானி குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘முகேஷ் அம்பானி - நிதா அம்பானி ஆகியோர் முதன்முறையாக தாத்தா - பாட்டிகளாகி உள்ளனர்.

அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனெனில், திருபாய் அம்பானி மற்றும் கோகிலாபென் அம்பானி ஆகியோர் அவர்களது கொள்ளுபேரனை தற்ேபாது வரவேற்கிறார்கள். தாய் மற்றும் மகன் இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர். குடும்பத்திற்கு வந்துள்ள புதிய ஆண் குழந்தையால் அம்பானி குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>