×

இம்மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

செய்யூர், : செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். அப்போது, இம்மாதம் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஈசூர், நீலமங்கலம், வெள்ளங்கொண்ட அகரம், வெண்ணாங்குபட்டு உள்பட பகுதிகளை அமைச்சர் செங்கோட்டையன் மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் புயல், மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமரிடம் முதல்வர் விளக்கியுள்ளார். இங்கு குடிமராமத்து பணிகள் நடைபெற்றதால், வெள்ள சேதங்கள் குறைந்திருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வெள்ள சேதங்களை மத்திய குழு ஆய்வு செய்துள்ளது. வருவாய் மற்றும் வேளாண் துறையின் கணக்கெடுப்புக்கு பிறகு, இன்னும் 2 நாட்களில் முழுமையான வெள்ள சேத விவரங்கள் தெரியவரும். பள்ளிகள் இம்மாதம் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அதற்கான முடிவை முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்வோம்’ என்றார்.



Tags : Schools ,interview ,Senkottayan , Schools, Minister Senkottayan, Pat
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...