35 வயது மதிக்கத்தக்க பெண் 17 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் : ஜார்கண்ட்டில் கொடூரம்!!

ஜார்கண்ட், : இளம்பெண்ணை 17 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜார்க்ண்ட் மாநிலம் டும்கா பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நேற்று முன்தினம்  அதே பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றார். அங்கு காய்கறிகளை வாங்கி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் 17 பேர் கொண்ட கும்பல் அவரை, கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது.

அவர்களிடம் இருந்து தப்பி வீட்டுக்கு வந்த அந்த பெண், நடந்த சம்பவத்தை கணவரிடம் கூறி கதறி அழுதார்.

இதையடுத்து, சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து 17 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண், மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>