×

2021 பிப். முதல் வாரம் இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம்: டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பு.!!!

மும்பை: இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வரும் 2021 பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்தியா வரும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகளிலும், 5 டி20 போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் வரும் பிப்ரவரி 5-ம் தேதி முதல் மார்ச் 28-ம் தேதி வரை விளையாடவுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில், பிப்ரவரி 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையும்,  இரண்டாவது டெஸ்ட் சென்னையில் பிப்ரவரி  13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் (பகலிரவு ) பிப்ரவரி 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையும், நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் மார்ச் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

மேலும், இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் முதல் டி20 மார்ச் 12-ம் தேதியும், இரண்டாவது டி20 மார்ச் 14-ம் தேதியும், மூன்றாவது டி20 மார்ச் 16-ம் தேதியும், நான்காவது டி20 மார்ச் 18-ம் தேதியும், ஐந்தாவது டி20 மார்ச் 20 -ம் தேதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைபோல், இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3 ஒரு நாள் போட்டிகளும் புனேவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புனேவில் முதல் ஒரு நாள் போட்டி மார்ச் 23-ம் தேதியும், இரண்டாவது ஒரு நாள் போட்டி மார்ச் 26-ம் தேதியும், மூன்றாவது ஒரு நாள் போட்டி மார்ச் 28-ம் தேதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : India ,Tour ,England ,Test , 2021 Feb. First Week England Team India Tour: Participation in T20, One Day and Test matches. !!!
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!