×

விவசாயிகளின் டெல்லி போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தான், சீனா எதிரி நாடுகள் உள்ளது : மத்திய அமைச்சர் கருத்தால் சர்ச்சை

மும்பை : விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இருப்பதாக மத்திய அமைச்சர் ஒருவர் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் பட்னாப்பூரில் நடைபெற்ற சுகாதார மையம் ஒன்றின் தொடக்க விழாவில் மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் ராவ்சாகிப் தான்வே கலந்து கொண்டார். அப்போது பேசிய தான்வே,  விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தான், சீனா ஆகிய எதிரி நாடுகள் இருப்பதாக பகீரங்கமாக குற்றம் சாட்டினார்.

முன்னதாக மத்திய அரசின் என்.ஆர்.சி., சி.ஏ.ஏ. நடவடிக்கைகளால் இஸ்லாமியர்கள் 6 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று வெளிநாட்டு சக்திகள் தூண்டிவிட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் ஒரே ஒரு இஸ்லாமிய சமூகத்தினராவது நாட்டை விட்டு வெளியேறப்பட்டார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வெளிநாட்டினரின் முயற்சி அப்போது பலிக்கவில்லை என்று கூறியுள்ள அமைச்சர் தான்வே, தற்போது விவசாயிகளை தூண்டிவிட்டு சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டினரின் சதி என்ற மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  



Tags : China ,Pakistan ,rivals ,struggle ,Union Minister ,Delhi , Farmers, Delhi, Struggle, Pakistan, China, Union Minister
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா