×

சென்னை அசோக் நகரில் போலீஸ் போல நடித்து பணம், நகை கொள்ளை: உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்துள்ளதாக கூறி கைவரிசை

சென்னை: சென்னை அசோக் நகரில் தொழிலதிபர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் போலீஸ் போல நடித்து 12 லட்சம் ரூபாய் பணமும், மற்றும் 45 சவரன் நகைகளை திருடி சென்றனர். அசோக் நகரில் 79-வது செக்டரில் வசித்து வருபவர் பாண்டியன். கேஸ் ஏஜென்சி நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் விற்பனை செய்து வரும் இவரது வீட்டிற்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் தங்களை போலீஸ் என்று கூறி உள்ளே புகுந்துள்ளது. உரிமம் இல்லாமல் பாண்டியன் துப்பாக்கி வைத்திருப்பதாக தெரிவித்த அவர்கள் வீட்டின் கதவை பூட்டிவிட்டு சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது பீரோவில் இருந்த 12 லட்சம் ரூபாய் பணம், 45 சவரன் நகை மற்றும் பாண்டியனின் செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவரை வீட்டில் வைத்து பூட்டிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து வெளியே வந்த பாண்டியன் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நகையுடன் தப்பிடியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.


Tags : policeman ,robbery ,jewelery ,Ashok Nagar ,Chennai , Acting like a policeman in Ashok Nagar, Chennai, robbery of money and jewelery: Handcuffs claiming to have a gun without a license
× RELATED சென்னை விமானநிலைய குப்பைத்...