×

கேள்விக்குறியாகிறதா ஃபைசர் தடுப்பூசியின் நம்பகத்தன்மை?.. பிரிட்டனில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 24 மணி நேரத்தில் இருவருக்கு ஒவ்வாமை பிரச்சனை

லண்டன்: பிரிட்டனில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 24 மணி நேரத்தில் இருவருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக இங்கிலாந்தில் கடந்த 8-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கின. இந்த  தடுப்பூசிக்கு இங்கிலாந்தில் அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதி கடந்த வாரம் வழங்கப்பட்டது.  அரசின் அனுமதியை அடுத்து  நேற்று பிபைசர் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

முதன் முதலாக, ஃபைசர் தடுப்பூசி 90வயது மூதாட்டியான மார்கிரெட் கெனென் என்பவருக்கு போடப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் ஃபைசர் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் பிரிட்டனில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 24 மணி நேரத்தில் இருவருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டிருப்பது ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனை அடுத்து நேற்று அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள பிரிட்டனின் மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பு தீவிர ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசி போடப்படும் 10-ல் ஒருவருக்கு உடற்சோர்வு, தசை வலி, குளிர் காய்ச்சல், மூட்டு வலி, தலைவலி போன்ற உவாதைகள் ஏற்படுவது இயல்பு தான் என்று அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே அமெரிக்காவில் ஃபைசர் தடுப்பூசி மருந்தின் இறுதிக்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தன்னார்வலர்கள் 4 பேருக்கு பக்கவாத நோயின் அறிகுறிகள் தென்பட்டிருப்பது ஃபைசர் நிறுவன தடுப்பூசி மருந்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.


Tags : Pfizer , Is the reliability of the Pfizer vaccine in question?
× RELATED 12 -15 வயது சிறார்களுக்கு கொரோனா...