×

12 -15 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி?!: ஐரோப்பிய மருந்து நிறுவனத்திடம் ஃபைசர் விண்ணப்பம்..!!

ரோம்: ஐரோப்பிய நாடுகளில் 12 முதல் 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் தங்களது தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு ஃபைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பைசரும், ஜெர்மனியின் பயோ என்டெக் இணைந்து தயாரித்து உள்ள கொரோனா தடுப்பூசி, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 27 நாடுகளில் 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தங்கள் நிறுவன தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு ஐரோப்பிய மருந்து நிறுவனத்திடம் பைசரும், பயோ என்டெக் நிறுவனமும் விண்ணப்பித்துள்ளன. 
அமெரிக்காவிலும் இதே வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி பயன்படுத்த பைடன் அரசின் FDA எனப்படும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பிடம் இவர்கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர். ஃபைசர் நிறுவனத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால் 12 – 15 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 12 -15 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி?!: ஐரோப்பிய மருந்து நிறுவனத்திடம் ஃபைசர் விண்ணப்பம்..!! appeared first on Dinakaran.

Tags : Pfizer ,European Medicines Agency ,Rome ,
× RELATED உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் ஞாயிறு