×

சின்னத்திரை நடிகை சித்ராவின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது: சித்ராவின் தாய்

சென்னை: சித்ராவின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது என சித்ராவின் தாய் தெரிவித்துள்ளார். பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(28) சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த நிலையில் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தற்போது நடிகை சித்ரா தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் எனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தாயார் தெரிவித்துள்ளார்.  எனது மகள் வலிமையான மனநிலை கொண்டவர். எப்படி இறந்தார் என்பதில் சந்தேகம் உள்ளது என சித்ராவின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.


Tags : Chitra ,death , Logo actress Chitra's death is suspected: Chitra's mother
× RELATED விவசாயிகளுக்கு விதைகள், இடுபொருட்கள் விநியோகம்