×

தொடர் மழை காரணமாக 5 ஆண்டுக்கு பின் நிரம்பிய வள்ளிமதுரை தடுப்பணை

அரூர்: அரூர் அடுத்த வள்ளிமதுரை தடுப்பணை, தொடர் மழை காரணமாக 5 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில் வரட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரி மலையில் இருந்து, இந்த அணைக்கு தண்ணீர் வருகிறது. இந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரால் தாதரவலசை, கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லபுடையாம்பட்டி, அச்சல்வாடி,  செல்லம்பட்டி உள்ளிட்ட 15கிராமங்களை சேர்ந்த 5108 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், 28 ஏரிகளை நிரப்பி நிலத்தடி நீர்மட்டத்தை உயர வழிவகை செய்கிறது.

இந்நிலையில், ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்கள் காரணமாக, வரட்டாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், வள்ளிமதுரை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் நேற்று அணையின் மொத்த கொள்ளளவான 34.45 அடியும் நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. 5 ஆண்டுகளுக்கு பின், இந்த தடுப்பணை நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : dam , Continuous rain
× RELATED பிளவக்கல் பெரியாறு அணைக்கு தண்ணீர் தேடி வரும் யானைகள்