×

சசிகலாவின் சுயலாபத்திற்காக ஜெயலலிதா இறப்புச்சான்று தாக்கல் செய்யவில்லை: மூத்த வக்கீல் என்.ஜோதி பேட்டி

சென்னை:  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வழக்குகள் குறித்து அவரின் வக்கீல் என்.ஜோதி, சென்னை அண்ணா நகரில் பேட்டி அளித்தபோது கூறியதாவது:  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து சுமார் 80 நாட்கள் கழித்துதான் அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு புத்தகத்தில் எந்த இடத்திலும் ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்து கூறப்படவில்லை. இறந்து போன மனிதர் மீது வழக்கு தொடர்ந்து நடத்தக்கூடாது என்பது தான் சட்ட விதி. இறந்து போன நபர் விடுதலையாகிவிட்டார் என்ற நிலையில் தான் இருந்தார். இறந்துபோனவர்கள் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் நீர்த்துவிடுகிறது என்பதுதான் சட்ட நிலைமை.

 ஜெயலலிதா இறந்துவிட்டதை சசிகலா தரப்பு ஏன் சான்றிதழுடன் வழக்கின்போது தாக்கல் செய்யவில்லை? தாக்கல் செய்திருந்தால் அந்த வழக்கில் ஜெயலலிதா பெயர் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சசிகலா தனது சுய லாபத்திற்காக இதை செய்யவில்லை. ஜெயலலிதா மீது வழக்கில் எந்த அபராதமும் இல்லை. மன்னார்குடி கும்பலின் பாவத்தை சுமந்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவை பிணைக்கைதியாகவே வைத்திருந்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Jayalalithaa ,N. Jyoti ,Sasikala ,interview ,Senior , Jayalalithaa did not file death certificate for Sasikala's self-interest: Senior lawyer N. Jyoti interview
× RELATED எடப்பாடி கொடுத்த ‘சீக்ரெட் சிக்னல்’...