இந்தியன் வங்கி சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு

சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை (ஐடிபிடி) முன்னிட்டு, இந்தியன் வங்கி சார்பில், நிறுவன-அமைப்புகள் சார்ந்த சமூக பொறுப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்கான ஆதரவு திரட்டப்பட்டது.

ஐடிபிடி இயலாமை-பிரச்னைகள் குறித்த புரிதலை ஊக்குவிப்பதற்கும், மாற்றுத்திறனாளிகளின் கவுரவம், உரிமைகள் மற்றும் அவர்களுக்கான ஆதரவுக்காகவும், ஆண்டுதோறும் டிசம்பர் 3ம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினமாக  அனுசரிக்கப்படுகிறது. இந்தியன் வங்கியின், புவனேஸ்வரில் உள்ள எப்ஜிஎம் அலுவலகம் கம்பளிப் போர்வைகளை மாற்றுத்திறனாளிகளுக்காக ஓலாட்புர், கட்டாக்கில் உள்ள சுவாமி விவேகானந்தா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிரெய்னிங்  அண்டு ரிசார்ச்சிலும், டெல்லியின் உள்ள எப்ஜிஎம் அலுவலகம் ராஜேந்த்ர நகரில் கம்பளி போர்வைகளை ராஷ்ட்ரீய விர்ஜா அந்த் கன்யா வித்யாலயாவில் உள்ளவர்களுக்கும் வழங்கியது.

விஜயவாடாவில் உள்ள மண்டல  அலுவலகம் இதுபோன்ற கம்பளி போர்வைகளையும் உணவு பொருட்களையும் மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் மாணவர் சமூகத்தினருக்கு விஜய் மேரி இண்டக்ரேடட் பள்ளியிலும், போபாலில் இருக்கும்  மண்டல அலுவலகம் அப்னா கர் ஓல்ட் ஏஜ் ஹோமில் தங்கியிருப்பவர்களுக்கும் வழங்கியது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி கேட்பொலிக்கான கருவியும், வண்ணங்களிட்டு நிரப்பக்கூடிய புத்தகங்களும் அவற்றிற்கான வரை  பென்சில்களையும் சற்றே திறன் குறைந்துள்ள விசேஷ குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், கில்ட் ஆப் சர்வீஸ், பாலவிஹார் சென்னையில் வழங்கியது.

Related Stories:

>