திருக்கோவிலூர் அருகே குப்பை கொட்டும் இடமாக மாறும் தென்பெண்ணை ஆற்று தரைப்பாலம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணையாறு குப்பை கிடங்காக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் தென்பெண்ணையாறு உள்ளது. இப்பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே உள்ள பெரிய பாலத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் கடந்த ஆறு மாத காலமாக அனைத்து வாகனங்களும் தரைப்பாலம் வழியாக செல்கின்றன.

இங்கு தரைப்பாலத்தின் அருகே பிரசித்திபெற்ற சிவன்கோயில் உள்ளது. மேலும் திருக்கோவிலூர்-அரகண்டநல்லூர் பகுதியை இணைக்க இந்த தரைப்பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாக செல்கின்றன. தரைப்பாலத்தை ஒட்டினாற்போல் திருக்கோவிலூர் பகுதியில்  உள்ள மருத்துவ கழிவுகள், வணிக வளாகங்களில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேட்டை விளைவிக்கின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள குப்பைகளை தீயிடுவதால் புகை மண்டலமாக மாறிவருகிறது. குறிப்பாக அப்பகுதியில் மிக அருகில் சங்ககால பெரும் புலவர் கபிலர் நினைவுத்தூண் அமைக்கப்பட உள்ளதால் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: