சிசோடியா தொடர்ந்த அவதூறு வழக்கில் சம்மனை ரத்து செய்யக்கோரி பாஜ எம்பி மனோஜ் திவாரி மனு

புதுடெல்லி: ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கில், விளக்கம் கேட்டு தனக்கு வழங்கப்பட்ட சம்மனை ரத்து செய்யுமாறு பாஜக எம்.பி. மனோஜ் திவாரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி அரசு பள்ளிக்கான வகுப்பறைகள் கட்டியதில் ஊழல் நடைபெற்றதாக கூறிய குற்றச்சாட்டு காரணமாக,  பாஜ தலைவர்கள் சிலருக்கு எதிராக ஆம் ஆத்மி அரசு துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அவதூறு வழக்கு தொடர்ந்தார். குறிப்பாக பாஜகவின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோஜ் திவாரி, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் மற்றும் பர்வேஷ் வர்மா, எம்எல்ஏக்கள் மஞ்சிந்தர் சிங் சிர்சா மற்றும் விஜேந்தர் குப்தா மற்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் குரானா ஆகியோருக்கு எதிராக  இந்த அவதூறு வழக்கை சிசோடியா தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த கீழ் நீதிமன்றம், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி பாஜ தலைவர்களுக்கு சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், இந்த சம்மனை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி மனோஜ் திவாரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி அனு மல்கோத்ரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திவாரி சார்பில் ஆஜரான வக்கீல் பிங்கி ஆனந்த் வாதிடுகையில், “விசாரணை நீதிமன்றத்தின் சம்மன் உத்தரவு சட்டப்பூர்வமாக அனுமதிக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்திருப்பதால் அது சட்டவிரோதமானது. எனவே, இந்த கீழ் நீதிமன்றத்தின் சம்னை ரத்து செய்ய வேண்டும்” என்றும் கூறினார்.

இதேபோன்ற பாஜ எம்எல்ஏ வீேஜ ந்தர் குப்தா சார்பில் வக்கீல் சோனியா மாத்தூர் ஆஜராகி இதே கோரிக்கையை முன்வந்தார்.

அப்போது டெல்லி அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ராகுல் மெக்ரா வாதிடுகையில்,“ திவாரியின் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் உரிய தகுதி நிலையில் இல்லை. எனவே, அவற்றை தெளிவான நகல்களை சமர்பிப்பதோடு, டைப் செய்யப்பட்ட உண்மை நகல்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தர வேண்டும்” என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆவணங்களை படிக்கும் வகையில் தெளிவான டைப் செய்யப்பட்ட நகல்களை சமர்பிக்க வேண்டும் என திவாரியின் வக்கீலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related Stories:

>