புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல்: ரவுடி படுகாயம்

காலாப்பட்டு:  புதுச்சேரி சிறைக்குள் அடிக்கடி கைதிகளுக்கு இடையே மோதலும்  ஏற்பட்டு வருகிறது. இதனால் முக்கிய ரவுடிகள் 5 பேரை வேறு மாநில சிறைக்கு  மாற்ற சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.  இதனிடையே நேற்று   முன்தினம் கொலை வழக்கு விசாரணை கைதியான வில்லியனூர், உத்திரவாகினிபேட்டை சேர்ந்த  ரவுடி பாம் ரவி  தனது அறையில்  படுத்திருந்தார். அப்போது குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு  தகடுகளுடன் அங்கு வந்த பிரபல  ரவுடிகள் தடி அய்யனார், அஜித்குமார், தாடி  அய்யனார் என்ற ராஜதுரை ஆகியோர் அவர் மீது கொலைவெறி தாக்குதல்  நடத்தினர்.

பதிலுக்கு அவரும் தாக்குதலில் ஈடுபட்டதால், பதற்றமான சூழல்  நிலவியது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறை வார்டன்கள்  மோதலை தடுத்து பாம் ரவியை அக்கும்பலிடமிருந்து காப்பாற்றினர். படுகாயமடைந்த அவருக்கு  சிறைச்சாலைக்குள் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தகவலறிந்து அங்கு வந்த சிறைத்துறை கண்காணிப்பாளர் கோபிநாத் விசாரித்தார்.  அவரது புகாரின்படி காலாப்பட்டு போலீசார் 3 கைதிகள் மீதும் 2 பிரிவுகளில்   வழக்குபதிவு செய்தனர். மாஜிஸ்திரேட் ஒப்புதல் பெற்று  சிறைக்கு சென்ற காலாப்பட்டு போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Related Stories:

>