×

பிராங்க் அண்ட் கோ ஏரியில் முள் புதர் அகற்றம்: தங்கவயல் நகரசபை நடவடிக்கை

தங்கவயல்: தங்கவயல் ஆண்டர்சன் பேட்டை பிராங் அண்டு கோ பகுதியில், ஒரே எரி உள்ளது. ஒரு காலத்தில் அந்த பகுதியில் இருந்த விவசாய  நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதி மக்களின் குடிநீர் தேவைகளுக்கும் பயன்பட்டு வந்தது. இந்த ஏரியின் கரை பாதை சுரங்க தொழிலாளர் குடியிருப்பு  பகுதி மக்கள், முக்கிய மார்க்கெட் பகுதியான ஆண்டர்சன் பேட்டை செல்லவும், மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும் பயன்பட்டு வருகிறது. நாளடைவில் இந்த அழகிய எரியில் கழிவு நீர் கலந்தும், குப்பை கூளங்கள் கொட்டப்பட்டும், ஆகாயதாமரை செடி புதர் படர்ந்தும் மாசடைந்தது. நீர்  வற்றி புதர்காடாக மாறியது. இதுகுறித்து அந்தபகுதி மக்கள் நகரசபையில், ஏரியை புனரமைத்து, சீர்படுத்தி பராமரிக்க வேண்டும்  என்று கோரிக்கை  விடுத்தும் பயன் இல்லை. மேலும் இந்த ஏரியில் போடப்பட்டுள்ள நான்கு ஆழ்துளை போர்வெல் நீர் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.  இந்த ஆழ் துளை கிணறுகளின் மின்சார மோட்டார்களும் ஏரியில் அமைக்க பட்டுள்ளன. இந்த மின்சார மோட்டார்களை ஆக்கிரமித்து புதர்கள் காடு  போல் வளர்ந்து மூடி கிடக்கிறது. போர்வெல் நீரை பொது மக்களுக்கு வினியோகம் செய்ய, மின்சார மோட்டாரை இயக்குவதற்கு செல்ல கூட வழி  இல்லாத வகையில்  புதர்கள் காடு போல மண்டி கிடந்தது.

மேலும் இதனால் பகுதி மக்களின் சுகாதாரமும் பாதிப்படைகிறது. கொசுக்கள் அதிகரித்து, பாம்புகளின் பெருக்கமும் பொதுமக்களை நிம்மதி இல்லாமல்  செய்கிறது. பல வருடங்களுக்கு முன் பொதுத்துறை நிறுவனத்தின் நிதியில் இந்த ஏரியை புனரமைத்து சுத்திகரிப்பு நீர் நிலையம் அமைக்க நகரசபை  திட்டமிட்டது. ஆனால் திட்டம் செயல் படுத்தப்பட வில்லை.தற்போது, தங்கவயலில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் நகரசபை, ஏரியில் மண்டி கிடக்கும் புதர்களை அகற்றி தூர் வாரினால், ஏரியும் நிரம்பும்,  சுற்றுப்புற சுகாதாரமும் மேம்படும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாகும் .மேற்கண்ட செய்தி கடந்த ஆகஸ்ட் மாதம் தினகரன் நாளிதழில் வெளியானது. அந்த பகுதியில் அமைந்துள்ள எட்கர் வார்டு கவுன்சிலர் தங்கராஜ்,  ஏரியில் ஆக்கிரமித்து காடு போல் வளர்ந்துள்ள முட் புதர்களை அகற்றி ஏரியை தூர் வார வேண்டும் என்று தொடர்ந்து நகர சபையில் வலியுறுத்தி  வந்தார். இந்த நிலையில் நேற்று ஜே.சி.பி.எந்திரம் மூலம் முதல் கட்டமாக ஏரியில் புதர்கள் மண்டி கிடந்த போர்வெல் மின்சார மோட்டார் அறை  இருக்கும் இடம் வரை புதர்கள் அகற்றப்பட்டு பாதை ஏற்படுத்தப்பட்டது.பல வருடங்களுக்கு முன் பொதுத்துறை நிறுவனத்தின் நிதியில் இந்த ஏரியை புனரமைத்து சுத்திகரிப்பு நீர் நிலையம் அமைக்க நகரசபை திட்டமிட்டது



Tags : Thorn bush ,Frank & Co , At Frank and Co. Lake Thorn bush removal: Goldfields municipal action
× RELATED உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி...