விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் களமிறங்கினர்

புதுடெல்லி: விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லியை சேர்ந்த மாணவர்களும் கைகோர்த்துள்ளனர். அதேசமயத்தில், இந்த மாணவர்கள் நாடு  முழுவதும் உள்ள விவசாயிகள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைளை குறிப்பட்டு அவற்றை சுவரொட்டிகளாக டெல்லி எல்லை பகுதிகளில் ஒட்டி  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுபற்றி டெல்லி பல்கலைக்கழகத்தின் சட்டப்படிப்பு மாணவர் ரவீந்தர் சிங் (22) கூறுகையில்,  “ நாட்டை பல்வேறு பிரச்சினைகள் பாதித்து வருகிறது.  அதுகுறித்து  மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறார்கள்.  குறிப்பாக, விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் சந்தித்து  வரும் பிரச்னைகள் குறித்து நாங்கள் கவைலயடைந்தள்ளோம்.

அவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து எடுத்து கூற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இதற்காக நாங்கள் ஆங்கிலம், இந்தி, உருது  மற்றும் பஞ்சாபி போன்ற பல்வேறு மொழிகளில் சுவரொட்டிகளை உருவாக்கி அவற்றை இங்குள்ள பகுதிகளில் ஒட்டுகிறோம்.  இதன் மூலம் நாம்  என்ன சொல்ல நினைக்கிறோம்  என்பதை மக்கள் படித்து புரிந்து கொள்ள முடியும்”என்றும் கூறினார்.முன்னதாக, டெல்லியில் உள்ள பல்வேறு பல்கலை கழகங்களை சேர்ந்த மாணவர்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேண்ட்  வாத்தியங்களை இசைத்து பாட்டு பாடி ஆதரவை வெளிப்படுத்தினர். மாணவர்கள்  மட்டுமின்றி வேறு பலரும் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர்.

Related Stories:

>