மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது

சித்ரதுர்கா: ஊருக்குள் புகுந்து கிராமத்தினரை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். ஒசதுர்கா தாலுகா கஸ்பா ஹூப்பள்ளி பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதை கண்ட கிராமத்தினர் விவசாய நிலத்திற்கு செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். ஊருக்குள் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினருக்கு கிராம மக்கள் ேகாரிக்கை வைத்தனர்.இதையடுத்து வனத்துறையினர் கஸ்பா ஹூப்பள்ளி அருகேயுள்ள புருடேகட்டே கிராமத்தில் உள்ள ரங்கநாத சுவாமி மலைப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தைக்கு சுமார் மூன்று வயது இருக்கும். இந்த சிறுத்தையை வனத்துறையினர் சித்ரதுர்காவில் உள்ள அடுமல்லேஸ்வரா மிருக காட்சி சாலையில் கொண்டு சென்று விட்டனர்.

Related Stories:

>