×

நாளை ஊரடங்கு தொடங்குவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

சென்னை: நாளை தமிழ்நாடு முழுவதுமாக முழு ஊரடங்கு தொடங்க இருக்கும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்வதால் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
நாளை முதல் ஊரடங்கு காரணமாக சென்னையை விட்டு தென் மாவட்டங்களுக்கு அதிகப்படியான வாகனங்கள் செல்கின்றன. இதனால் மதுராந்தகம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் சுங்கச்சாவடியில் இன்று சுமார் 3 கி.மீ தூரம் அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதற்கு காரணம் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு என்பதனாலும் மேலும் இந்த ஊரடங்கு என்பது கால நீட்டிப்பு செய்யப்படும் என்பதால் சென்னையில் வசிக்கும் மக்கள் குடும்பத்தை காலி செய்து கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் செல்லும் அவலநிலை காணப்படுகிறது.
எந்த அளவிற்கு 4 சக்கர வாகனங்கள் செல்கிறதோ அதே அளவிற்கு இருசக்கர வாகனங்களும் செல்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது….

The post நாளை ஊரடங்கு தொடங்குவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chengalputtu district ,Madurandagam, Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கலவரத்தை தூண்ட முயற்சி எச்.ராஜா மீது வழக்கு