சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி: விக்கிரமராஜா வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: முதல்வர் கொரோனா பெருந்தொற்று கால கட்டுப்பாடுகளில் மீண்டும் தளர்வுகளை அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அதே சமயம் சுற்றுலா துறை தொழில் சார்ந்த சுற்றுலா தலங்கள் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இதனால் சுற்றுலா நகரை நம்பியிருக்கும் வணிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மெரினா கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதித்திருப்பதைப் போல, சுற்றுலா நகரமான குற்றால நீர்வீழ்ச்சியை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்திட அரசு அனுமதி அளித்திட வேண்டும். முதல்வர், துணை முதல்வர், சுற்றுலாத்துறை அமைச்சர் உடனடியாக உரிய கவனம் செலுத்தி, குற்றால நீர்வீழ்ச்சியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதித்து மக்களின் மன அழுத்தத்தை நீக்கிடவும், வணிகர்களின் வாழ்வாதாரத்தை மீட்டிட வேண்டும்.

Related Stories:

>