×

திருப்பதியில் கைசிக துவாதசி முன்னிட்டு உக்கிர சீனிவாச மூர்த்தி அருள்

திருமலை: ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு, உக்கிர சீனிவாச மூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  கைசிக துவாதசி நேற்று நடந்தது. மகாவிஷ்ணு தெலுங்கில் வரும் ஆடி மாதம் சுக்ல ஏகாதசியன்று சயன  கோலத்துக்கு செல்வார். பின்னர், தெலுங்கில்  கார்த்திகை மாத கைசிக துவாதசியன்று சயன கோலத்தில் இருந்து எழுவதாகப்  புராணங்களில் கூறப்படுகிறது. அதன்படி, மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருந்து எழுவதை  வரவேற்கும் விதமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி நேற்று அதிகாலை நடந்தது.

இதையொட்டி சுப்ரபாத சேவை, தோமாலை சேவைக்குப்பிறகு  சூரிய உதயத்துக்கு முன்பாக அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை  உக்கிர சீனிவாசமூர்த்தி  தேவி, பூதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். வருடத்திற்கு ஒருமுறை வீதியுலா நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு மழை மற்றும் கொரோனாவால் கோயிலுக்குள்ளே எழுந்தருளி கோயிலுக்குள்ளே சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பக்தர்கள் உக்ர சீனிவாசமூர்த்தியை, ‘வெங்கடதுரைவார்’ என்றும் அழைப்பர். மேலும் கோயிலுக்குள் தங்க வாசலில் காலை 7 மணியளவில் கைசிக துவாதசி ஆஸ்தானம் நடந்தது.



Tags : occasion ,Srinivasa Murthy Arul ,Tirupati ,Kaisika Duvatasi , Intense Srinivasa Murthy grace
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...