×

தென் தமிழக கடல் பகுதியில் 3.9 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு: இந்திய கடல் சேவை மையம் தகவல்

நாகர்கோவில்: தென் தமிழக கடல் பகுதியில் 3.9 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. நிவர் புயலை தொடர்ந்து, குமரி மாவட்டம் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் 2.5 மீட்டர் முதல் 3.9 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும் இந்த நிலைமை காணப்படும். மேலும் வங்க கடல் பகுதிகள் மிகவும் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இதனை போன்று வட தமிழக கடல் பகுதியில் களிமர் முதல் புலிகாட் வரையுள்ள கடல் பகுதிகளில் 3.5 மீட்டர் முதல் 5.5 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது.

Tags : South Tamil Nadu Sea: Indian Maritime Service Center , 3.9 m high tidal wave in South Tamil Nadu Sea: Indian Maritime Service Center Information
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...