சிறப்பான சேவையில் ஈடுபட்டதற்காக நூலகர்களுக்கு விருது வழங்கினார் முதல்வர்

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசு பொது நூலகங்களில் சிறப்பாக சேவையாற்றியமைக்காக 2020ம் ஆண்டிற்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 33 நூலகர்களுக்கு விருதுகளை வழங்கும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5 நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதிற்கான நற்சான்றிதழ்கள், தலா 50 கிராம் வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் தலா 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, கௌரவித்தார். இதில்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் சண்முகம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், பொது நூலக இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) நாகராஜமுருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>