நடிகை தபு நடித்துள்ள தொடருக்காக கோயிலில் முத்தக் காட்சி ‘சீன்’ விசாரிக்க அமைச்சர் உத்தரவு

போபால்: நடிகை தபு மற்றும் நடிகர் இஷான் கட்டார் நடித்துள்ள வலைத் தொடரில், கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட முத்தக் காட்சிகள் குறித்து விசாரிக்க போலீசாருக்கு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஓடிடி ஊடக தளத்தில் ‘A Suitable Boy’ என்ற தொடர் வெளியாகி உள்ளது. அதில், குறிப்பிட்ட மதத்தினரின் மனதை நோகடிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. நடிகை தபு மற்றும் நடிகர் இஷான் கட்டார் நடித்துள்ள இந்த வலைத் தொடரில் கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட முத்தக் காட்சிகள் ஆபாசமாக உள்ளது. இது குறிப்பிட்ட மதத்தின் உணர்வுகளை புண்படுத்துகிறது.

எனவே, சர்ச்சைக்குரிய காட்சிகளின் உண்மைத் தன்மையை சோதிக்கும்படியும், அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்’ என்று கூறியுள்ளார். அதே நேரத்தில், பாஜக இளைஞரணி நிர்வாகி கவுரவ் திவாரி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இவ்விவகாரம் தொடர்பாக ரேவா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் முத்தக் காட்சிகள் இருப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளன. முத்த காட்சிகள் ஏன் கோயில் வளாகத்தில் படமாக்கப்பட்டன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இது குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>