×

சபரிமலையில் வருமானம் மிகவும் குறைந்தது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் தேவசம்போர்டு

திருவனந்தபுரம்: சபரிமலையில் வருமானம் மிகவும் குறைந்ததால் தேவசம்போர்டு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருவிதாங்கூர்   தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் சபரிமலை ஐயப்பன் கோயில் உட்பட  1,252 ேகாயில்கள் உள்ளன. ஆனாலும் சபரிமலை  ஐயப்பன் கோயிலில் இருந்துதான் அதிக  வருமானம் வருகிறது. இதை வைத்துதான்  தேவசம்போர்டு மற்றும் கோயில் ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம்  வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மாத சம்பளம் மற்றும் பென்ஷன்தொகை வழங்க  35  கோடி தேவைப்படுகிறது.இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில்   கடந்த ஆண்டு கார்த்திகை 1ம் தேதி  நடை திறந்த அன்று 3.32 கோடி வருமானம்  கிடைத்தது. ஆனால் தற்போது நடை  திறந்து 5 நாட்கள் ஆனபின்னரும் மொத்த  வருமானம் 50 லட்சத்தை தாண்டவில்லை.  தினமும் சராசரியாக 10 லட்சம் மட்டுமே  கிடைத்து வருகிறது.

ெகாரோனா பரவல் காரணமாக கடந்த  மார்ச் முதல் சபரிமலை  ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்ைல. இதனால்  350  கோடிக்கு மேல் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.   சபரிமலை ேகாயிலில் ஒருநாள் செலவுக்கு மட்டும் 38 லட்சம் தேவை. பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள் ஏலம்  போகவில்லை. கடந்த  ஆண்டு சபரிமலையில் 1 கோடிக்கு ஏலம்போன ஒரு  ஓட்டல் இம்முறை வெறும் 15  லட்சத்துக்கு மட்டுமே ஏலம் போயுள்ளது. தற்போதைய நிலையில் தேவசம்ேபார்டு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க  திருவிதாங்கூர்  தேவசம்போர்டு கேரள அரசிடம் ேகாரிக்கை  விடுத்துள்ளது.

முதல் முறையாக ஆழி அணைந்தது
சபரிமலை  ஐயப்பன் கோயிலில் 18 ஆம் படிக்கு முன்பு ஆழி உள்ளது. சபரிமலையில்  நடை  திறக்கும் நாட்களில், கோயில் நடை திறந்தவுடன் மேல்சாந்தி 18 ஆம் படி வழியாக  கீழே இறங்கி வந்து ஆழியில் தீபம் ஏற்றி எரிய வைப்பார். அதன்பின்னர்  சபரிமலை வரும் பக்தர்கள் நெய் தேங்காயை உடைத்து, அதில் பாதியை நெய்யுடன்  ஆழியில் வீசுவார்கள். இதன் மூலம் ஆழி கொளுந்து விட்டு எரியும். தற்போது பக்தர்கள் குறைவால் ஆழியில் நெய் தேங்காய் வீசுவதும் குறைந்து விட்டது.  இதன் காரணமாக கடந்த சில நாட்களாக ஆழி எரியாமல் அணைந்து காணப்படுகிறது. இது  சபரிமலை வரலாற்றில் இதுவரை நடக்காத சம்பவம்.



Tags : Sabarimala , Income is very low in Sabarimala Devasthanam board unable to pay salaries to employees
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு