மீட்பு விமானத்தில் தங்கம் கடத்தல்

சென்னை: துபாயிலிருந்து நேற்று காலை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையம் வந்தது. அதில் இருக்கைக்கு கீழே பார்சல் இருந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து பார்சலை எடுத்து பார்த்தபோது 1.3 கிலோ தங்கம் இருந்தது.

அதன் சர்வதேச மதிப்பு 67.25 லட்சம். துபாயிலிருந்து வந்த மற்றொரு மீட்பு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டபோது ராமநாதபுரம், புதுக்கோட்டை, சென்னையை சேர்ந்த 6 பயணிகளிடம்  உள்ளாடையில் தங்க கட்டிகள் மற்றும் தங்க பேஸ்ட்களை கைப்பற்றினர்.அதன் மொத்த எடை 2.7 கிலோ தங்கம். சர்வதேச மதிப்பு 1.39 கோடி.  6 பேரையும் சுங்கத்துறை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>