வலுப்பெறும் காற்றழுத்தம் தமிழகத்தில் மழை பெய்யும்

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் 23ம் தேதி இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்யும். சென்னையில் மேகமூட்டம் காணப்படும் சில நேரங்களில் லேசான மழையும் பெய்யும்.

Related Stories:

>