×

4 மணி நேரத்தில் பயணம் செய்ய ஏதுவாக சென்னை-பெங்களூரு இடையே அதிவிரைவு சாலை

சென்னை: நான்கு மணி நேரத்தில் பயணம் செய்ய ஏதுவாக ரூ.3840 கோடி செலவில் சென்னை  பெங்களூர் இடையே புதிதாக அதிவிரைவு சாலை அமைக்கப்படுகிறது. 3 கட்டங்களாக நடக்கவுள்ள இந்த சாலை பணிகளுக்கு டெண்டர் விடும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.  சென்னை முதல் பெங்களூரு இடையே ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக நான்கு வழிச்சாலை உள்ளது. 350 கி.மீ நீளமுள்ள இந்த சாலைகள் வழியாக பெங்களூரு செல்ல 6.30 மணி நேரம் ஆகிறது. இந்த பயண நேரத்தை மேலும் குறைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் வழிச்சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. இந்த புதிய வழிச்சாலை 258 கி.மீ நீளம் கொண்டது. சென்னையில் தொடங்கி ராணிப்பேட்டை, சித்தூர், பாலமநேரு, கோலார் வழியாக கிழக்கு பெங்களூரில் ஹோஸ்கோட் சென்றடைகிறது. இதன் மூலம் 4 மணி நேரத்தில் சென்றைடையும்.

ரூ.3840 கோடி செலவில் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணிகள் முழுவதும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடக்கிறது.  முதற்கட்ட பணிகள் முடிந்த நிலையில் இரண்டாவது கட்டமாக ஆந்திர மாநிலம் பங்கருபலம் முதல் குடிபாலா வரை 29 கி.மீ நீளத்தில் ரூ.918 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது கட்டமாக காஞ்சிபுரம் முதல் அரக்கோணம் வரை 25.5 கி.மீ நீள சாலை ரூ.858.93 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. வரும் டிசம்பர் 15ம் தேதி இதற்கான டெண்டர் திறக்கப்படுகிறது.  இந்த நிலையில் புதிதாக அமையவுள்ள இந்த சாலைகளில் அட்வான்ஸ் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு என்று உருவாக்கப்படுகிறது. இந்த சாலைகளில் எத்தனை வாகனங்கள் பயணிக்கிறது என்பதை ஒவ்வொரு சுங்கச்சாவடிகளில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

மேலும், இந்த சாலைகளில் வாகனங்கள் சென்றால் எவ்வளவு மணி நேரத்தில் செல்ல முடியும் என்பதும் அதில் கூறப்படுகிறது. மேலும், இந்த சாலைகளில் அவசர சேவை மையம் அமைக்கப்படுகிறது. இந்த சாலைகளில் கார் செல்லும் வழிபாதையில், லாரிகளும், லாரிகள் செல்லும் வழிப்பாதையில் கார் செல்வதை தடுக்கவும் கண்காணிப்பு மேற்கொள்ளப்ப்படுகிறது. இந்த சாலைகளில் விபத்து  நடந்தால் என்ன காரணத்திற்காக விபத்து நடந்தது என்பதை உடனே அறிக்கை தர வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இந்த சாலைகளில் நீர்வழிப்பாதையை கடக்க 7 இடங்களில் பாலமும், கோவிந்தவாடி அருகே ரயில்வே மேம்பாலம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சால ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மொத்தமுள்ள 258 கி.மீ. தூரத்தில் 74 கி.மீ. கர்நாடகத்துக்குள்ளும், 90 கி.மீ. ஆந்திராவிலும், 94 கி.மீ. தூரம் தமிழகத்துக்குள்ளும் இந்த சாலை அமையும். இந்த சாலை அமைக்கத் தேவையான நிலங்களை தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மாநில அரசுகளின் உதவியுடன் மத்திய அரசு கையகப்படுத்தியுள்ளது’ என்றார்.

* 3 கட்டங்களாக நடக்கிறது
* 858 கோடியில்
* காஞ்சிபுரம்-அரக்கோணம் இடையே சாலை அமைக்க டெண்டர்
* புதிய அதிவிரைவு சாலையில் சென்னை-பெங்களூரு 4 மணி நேரத்தில் பயணம் செய்யலாம்.
* இந்த சாலைகளில் அட்வான்ஸ் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படுகிறது.
* இந்த சாலை அமைப்பதற்கான செலவு ₹3840 கோடி.
* இதன்மூலம் எத்தனை வாகனங்கள் பயணிக்கின்றன என்பதை ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் ஒளிபரப்பாகும்.
* பெங்களூரு ஹோஸ்கோட் பகுதியில் ஆரம்பிக்கும் இந்த 4 வழிச் சாலை கோலார், பாலமநேரு, சித்தூர், ராணிப்பேட்டை வழியாக சென்னை வருகிறது.
* 2 கி.மீ தூரத்துக்கு இடையில் சிசிடிவி கேமரா மூலம் வாகனங்களின் நகர்வுகள் கண்காணிக்கப்படுகிறது.



Tags : Bangalore ,Expressway ,Chennai , Expressway between Chennai-Bangalore in 4 hours
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...