×

நாடக கலைஞர்கள் பஸ்சில் இசைக்கருவிகளை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்

சென்னை: தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடக  கலைஞர்களுக்கு மட்டும் கீழ்க்காணும் உபகரணங்களை பேருந்துகளில் கட்டணமில்லாமல் இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதிக்கும்படி அனைத்து  அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களுக்கு அறிவுறுத்தி நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாடக கலைஞர்களுக்கான கலைப்பொருள்கள் / இசைக்கருவிகளான, ஆடை அணிகலன்கள், ஒப்பனை பொருள்கள், இசை  வாத்தியக்கருவிகள், ஆர்மோனியம், தபேலா, டோலக், மிருதங்கம் மற்றும் சிறிய அளவிலான இசைக்கருவிகளை அரசு பஸ்சில் இலவசமாக எடுத்துச்  செல்லலாம்.



Tags : Drama artists , Drama artists on the bus Musical instruments can be carried free of charge
× RELATED நாடக கலைஞர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை