×

கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக உள்ளது; முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

சென்னை: கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக உள்ளது என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கனமழை தொடரும் நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த 28ம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பெய்துள்ளது. 31 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான அளவும் மழை பெய்துள்ளது.

முக்கிய நீர் தேக்கங்களில் நீர் அளவு:

நீர்மட்டம்                                          தற்போதைய நிலவரம்

மேட்டூரில் முழு நீர்மட்டம் 21 கனஅடி,                இன்றைய நீர் தேக்கம் 94.83 அடி.
பவானிசாகர் 105 அடி,                               தற்போது 95.47அடி.
பூண்டி 35 அடி,                                      28.65 அடி.
சோழவரம் 18.86 அடி,                                தற்போது 3.76 அடி.
செம்பரம்பாக்கம் 24 அடி,                             தற்போது 21. 13 அடி.
வீராணம் 15.60 அடி,                                 தற்போது 13.70 அடியாக உள்ளது.

தமிழகத்தில் இயல்பு நிலையை விட 40 சதவீதம் குறைவாக வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்துள்ளது. கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் மிகவும் அதிகமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என 321 இடங்களும், அதிகம்  பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 297 இடங்களும், மிதமான  பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என 1,096 இடங்களும், குறைவாக  பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என்று 1919 இடங்களும் கண்டறியப்பட்டு அதற்கென மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மழை, வெள்ளம் பாதிக்கப்படும் பகுதியில் வசிக்கும் மக்களுக்கென 4,713 தங்கும் மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு கூடுதலாக  4,680 தற்காலிக தங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 36 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு மற்றும் அறிவுரைகளை வழங்க அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தண்ணீர் தேங்கும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமர் குறிப்பிட்டார்.


Tags : districts ,Minister ,R.P. ,Udayakumar , Coastal District, Northeast Monsoon, Precautionary Measures, R.P. Udayakumar
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...