×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர்  முத்துராமலிங்கம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட, காஞ்சிபுரம் கோட்டாட்சியர் திவ்ய பெற்று கொண்டார். இதில், ஆண்கள் 6,22,081,  பெண்கள் 6,51,461, திருநங்கைகள் 174 என மொத்த 12,73,716 வாக்காளர்கள் உள்ளனர்.செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா வெளியிட, மாவட்ட  சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லலிதா பெற்று கொண்டனர்.மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், செய்யூர், மதுராந்தகம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.  இதில், ஆண்கள் 13,02,010, பெண்கள் 13,19,714, திருநங்கைகள் 325 என 26,22,049 வாக்காளர்கள் உள்ளனர்.

 வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், சப் கலெக்டர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள்,  உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள்  அலுவலக நேரங்களில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்ட பட்டியல் வெளியீட்டின் போது, திமுக சார்பில் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், நகர செயலாளர்  சன்பிராண்டு ஆறுமுகம், அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் உள்பட பலர்  இருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் தா.மோ.அன்பரசன், வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ், இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா,  இதயவர்மன், ஆர்.டி.அரசு, புகழேந்தி, அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் ஆகியோர்  இருந்தனர்.


Tags : Kanchipuram , Kanchipuram, Chengalpattu District Release of Draft Voter List
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...