கொரோனா தொற்றில் இருந்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி குணமடைந்தார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹூக்கு கடந்த 4ம் தேதி சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதை  தொடர்ந்து, அவர் அன்றைய தினம் இரவு 7.40 மணிக்கு சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள 3வது டவர் கட்டிடத்தில்  சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும், கொரோனா ேசாதனையும் செய்யப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவருக்கு 11  நாள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை காரணமாக தொற்றில் இருந்து குணமடைந்த தலைமை நீதிபதி நேற்று வீடு திரும்பினார்.  அவரை மருத்துவமனை முதல்வர் தேரனிராஜன் வழியனுப்பி வைத்தார்.

Related Stories:

>