×

ராஜஸ்தானில் அமைதியின் சிலை என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிலையை பகல் 12.30 மணியளவில் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: ஜெயினாச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜின் 151-வது பிறந்தநாளையொட்டி அமைதியின் சிலை என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை பகல் 12.30 மணியளவில் மோடி திறந்து வைக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் பாலியில் உள்ள ஜேத்புரா விஜய் வல்லப் சாதனா மையத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஜெயினாச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ் 1870 முதல் 1954 வரை ஜைனத்துறவியாக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் மக்களின் நல்னுக்காகவும், கல்வியைப் பரப்புவதற்காகவும் சமூக தீமைகளை எதிர்க்கும் வகையிலும் பல்வேறு கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பக்தி பாடல்கள் பலவற்றை எழுதியவர்.

மேலும் சுதேசி கொள்கையை வலியுறுத்தி விடுதலை போராட்டத்திற்கும் தீவிர ஆதரவளித்தவர். அவருடைய ஊக்குவி்ப்பால் கல்லூரிகள். பள்ளிகள், கல்வி மையங்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகின்றன. அவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் திறந்து வைக்கப்படவுள்ள சிலைக்கு அமைதியின் சிலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  151 அங்கலம் உயரமுள்ள இந்த சிலை 8 உலோகங்களைக் கொண்டும், செம்பு அதிக அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tags : Modi ,Rajasthan , In Rajasthan, the statue of peace, Modi, is unveiled
× RELATED மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்