×

தமிழகத்தில் இருந்து தக்காளி லாரியில் பெட்டி பெட்டியாக வெடிமருந்து கடத்தல்: வாளையார் சோதனை சாவடியில் சிக்கியது

திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே தக்காளி லாரியில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் ைகப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் இருந்து கேரளா செல்லும் வழியில் வாளையார் பகுதியில் சோதனைச்சாவடி உள்ளது. இதை கடந்துதான் கேரளா செல்ல முடியும். இங்கு தமிழகம் மற்றும் கேரள அரசு சார்பில் சோதனைச்சாவடிகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை வாளையார் சோதனைச்சாவடியில் ேகரள போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தமிழகத்தில் இருந்து வந்த மினி லாரியை நிறுத்தி விசாரித்தனர். அதில் இருந்தவர்கள் ஈரோட்டில் இருந்து அங்கமாலிக்கு தக்காளி லோடு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனாலும் அவர்களது நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார், மினி லாரியை சோதனை ெசய்தனர். அப்போது தக்காளிகளுக்கு இடையே 35 பெட்டிகளில் டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் இருந்தன.  அவற்றை கைப்பற்றிய போலீசார் லாரி டிரைவர் மற்றும் கிளீனரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தர்மபுரியை சேர்ந்த ரவி(38), திருவண்ணாமலையை சேர்ந்த பிரபு(30) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Tags : Walayar ,Tamil Nadu , Tomato truck from Tamil Nadu Box-by-box ammunition smuggling: Swordsman trapped at checkpoint
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...