பிரபல ரவுடியுடன் பிறந்த நாள் கொண்டாடிய இன்ஸ்பெக்டர்

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுப்ரமணியம்(49).  வாழப்பாடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியான சங்கர் என்பவருடன், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படங்களை, ரவுடி சங்கர் தனது வாட்ஸ்அப் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களுடன், கரியகோவில்  தனிப்பிரிவு எஸ்ஐக்கள் அருள்குமார், காரிப்பட்டி  அருள்குமார் மற்றும் டிரைவர்கள் 2 பேரும் இருந்தனர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories:

>