×

அவசரமாக மருந்து வாங்கவேண்டுமா? கேரளாவில் போலீசை அழைக்கலாம்

திருவனந்தபுரம்: கேரளாவில் அவசர நேரங்களில் மருந்து வாங்க பொதுமக்கள் போலீசாரை அணுகலாம் என முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.கேரள   முதல்வர் பினராயி விஜயன் கூறியது: கேரளாவில் கொரோனா பரவலை தடுக்கும்   வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்ைட   விட்டு ெவளியே ெசல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த  நிலையில்   பொதுமக்கள் வெளியே செல்லாமல் மருத்துவ வசதியை நாடலாம். இதற்காக கேரள   காவல்துறையின் ‘‘புளூ ெமடிசின்’’ என்ற செயலியின் சேவையை பொதுமக்களும்   பயன்படுத்தி கொள்ளலாம். மருத்துவமனைகளுக்கு  செல்லாமலேயே பொதுமக்கள் இந்த   செயலி மூலம் தொடர்பு கொண்டு மருத்துவர்களிடம் இருந்து ஆலோசனை பெறலாம். கொரோனாவுக்கு   மட்டுமின்றி மற்ற நோய்களுக்கும் இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி   கொள்ளலாம். வீடியோ மூலம் நோயாளியை டாக்டர்கள் பரிசோதித்து தேவையான   மருந்துகளை பரிந்துரைப்பார். கூடுதல் சிகிச்சை  தேவைப்பட்டால் மட்டுமே   மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை நடத்தலாம். இவர்கள் அந்த செயலி மூலம்   கிடைக்கும் இபாஸை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோல் அவசர நேரங்களில்   பொதுமக்கள் மருந்து கடைகளில் இருந்து  மருந்து வாங்க போலீசாரின் உதவியையும்   நாடலாம். இதற்காக 112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்   கூறினார்….

The post அவசரமாக மருந்து வாங்கவேண்டுமா? கேரளாவில் போலீசை அழைக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,CM ,Binarai Vijayan ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...