×

தீபாவளி பண்டிகை ஆடுகளுக்கு கடும் கிராக்கி இறைச்சி விலை உயரும் அபாயம்

திருவள்ளூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் இறைச்சி விலை கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வந்த நிலையில், விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்த விவசாயம் முடங்கியது. இதனால் கால்நடை வளர்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வந்தனர். வறட்சியால் ஆடுகளுக்கு பசுந்தீவனம் கிடைக்காததால், ஆடுகள் நோஞ்சான்களாக உள்ளன. இந்தவேளையில், தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளது.

இந்தவேளையில், ஆட்டு இறைச்சியின் தேவை அதிகரிக்கும் என்பதால், வியாபாரிகள், ஆந்திர மாநிலம் சென்று பெருத்த ஆடுகளை வாங்கி வருகின்றனர். அங்கும் ஆடுகளின் விலை ரூ.1000 முதல் ரூ.1500 வரை உயர்ந்துள்ளது. இது ஆட்டு இறைச்சியின் விலையில், கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை உயரும் என வியாபாரிகள் கூறுகின்றனர். தற்போது, சென்னையை தவிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளாட்டு இறைச்சி கிலோ ரூ.600 வரை விற்கப்படுகிறது. இதனால், வெள்ளாட்டு இறைச்சி விலை மேலும் உயரும் எனவும் தெரிவித்தனர்.

Tags : Diwali , Deepavali goats are at risk of rising meat prices
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...