×

கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள் உள்பட ஆபாச விளம்பரங்கள் ஒளிபரப்ப ஐகோர்ட் தடை

மதுரை: கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்னைக்கான மருந்துகள், உள்ளாடைகள் உள்ளிட்ட ஆபாச விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சகாதேவராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்னை தீர்வுக்கான மருந்துகள் தொடர்பான விளம்பரங்கள் மிகவும் ஆபாசமான வகையில் உள்ளன. இந்த விளம்பரங்கள் இளம் வயதினரை பாலியல் ரீதியாக தூண்டும் வகையில் உள்ளன. இதுபோன்ற விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு எவ்வித தணிக்கையும் இல்லை.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதற்கு இதுபோன்ற விளம்பரங்களும் காரணமாக அமைகின்றன. எனவே இவற்றை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்னைக்கான மருந்துகள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்தனர். மேலும் மனுவிற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர், தமிழக செய்தி, திரைப்பட தொழில்நுட்பத்துறை செயலர், சட்டத்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tags : ICourt , ICourt bans the airing of pornographic advertisements, including contraceptives and underwear
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...